வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2026

வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு

 

தமிழகத்தையொட்டிய வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.


தமிழகத்தையொட்டிய வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே, அதே காலகட்டத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், கேரளத்தையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் உருவாகும் இரு புயல் சின்னங்கள் காரணமாக, தென்மேற்கு அரபிக் கடலில் இருந்து கேரளம், தமிழகம் வழியாக தென்கிழக்கு வங்கக் கடல் வரை வளிமண்டலத் தாழ்வுப் பாதை நிலவ வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வானிலை சூழல்கள் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணா்கள் கணித்துள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி