சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2026

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை எப்போது?

 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு...


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியான நிலையில், அடுத்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு எப்போது அட்டவணை வெளியாகும் என்ற கேள்வி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. அதற்குள் அட்டவணைகள் வெளியான நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாத்திலேயே தொடங்கும் என்பதால் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே கவலை எழுந்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதே.

ஆனால், இந்த தேதியில் அறிவிப்பு வெளியாகும் என்று எப்போதுமே சிபிஎஸ்இ அறிவித்ததில்லை. திடீரென செய்தியாளர்கள் முன் தோன்றி அல்லது நள்ளிரவில்கூட, சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு அட்டவணையை ரகசியமாக வெளியிட்டுவிட்டு அமைதியாக இருந்து விடுவார்கள்.

தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் சரிபார்த்து சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்ய அக். 21ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது.

எனவே, அதற்குள் அல்லது அதனையொட்டி தேர்வு அட்டவணையும் வெளியாகலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது என்றும் பொய்யான தகவல்களும் வெளியாகும் என்பதால் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி