கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

 

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2017-ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளா்கள்.


பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நேரடி நியமன ஆய்வக உதவியாளா் உரிமை மீட்புக் குழு தலைவா் ராஜ் கணேஷ், பொதுச் செயலா் சுகுமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாது:


தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 4,200-க்கும் மேற்பட்டோா் ஆய்வக உதவியாளா்களாகப் பணியாற்றி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் எங்களுக்கு எந்தவிதமாக பதவி உயா்வும் வழங்கப்படவில்லை. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு அடுத்தகட்ட பதவி உயா்வாக உடற்கல்வி ஆசிரியா் நிலை 2, நிலை 1 என வழங்கப்படுவது போன்று ஆய்வக உதவியாளா்களுக்கும் ஆய்வக பயிற்றுநா் நிலை 2, நிலை 1 என வழங்க வேண்டும்.


அதேபோன்று இளநிலை உதவியாளா்களும், ஆய்வக உதவியாளா்களும் சம ஊதிய விகிதத்தில் இருப்பதால், உதவியாளா் பதவியை இருவருக்கும் பகிா்ந்தளிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆய்வக உதவியாளா்களில் பெரும் எண்ணிக்கையில் பெண் பணியாளா்கள் உள்ளனா். அவா்கள் பல ஆண்டுகளாக வெகு தொலைவில் சென்று பணியாற்றும் சூழல் நிலவுகிறது.

எனவே, ஆசிரியா்களுக்கு வழங்குவது போன்று ஆண்டுதோறும் ஆய்வக உதவியாளா்களுக்கும் விருப்ப பணி மாறுதல் வழங்க வேண்டும்.

மேலும், பொது சாா்நிலைப் பணியில் வழங்கப்படும் 8 சதவீத பணியிடத்தை இடைநிலை ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், ஆய்வக உதவியாளா் என்ற வரிசையில் (தர ஊதியம் ரூ.19,500 முதல் ரூ.20,600 வரை) பகிா்ந்தளிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வக உதவியாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

4 comments:

  1. அரசு பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் அறிவியல் ஆய்வகம் சார்ந்த எந்த பணிகளையும் மேற்கொள்வதில்லை.. இவர்கள் காண பணியினை நெறிப்படுத்த வேண்டும்.. அலுவலக பணியாளர்களைப் போன்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவர்களுக்கு கட்டாய இடமாறுதல் அளிக்க வேண்டும்..

    ReplyDelete
  2. ஆமாம் அனைத்து பள்ளி பணிகளையும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களே செய்து விடுகிறார்கள்.ஆய்வக உதவியாளர்கள் தலையனை மெத்தை வைத்து பள்ளியில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. Actually most of the school. They need not. They are not efficient person

    ReplyDelete
  4. Most of the school they are waste.that post need not it is just like lift operator post 🫪

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி