ஒரே நாளில் இரண்டு சிறப்பு ‘டெட்’ தேர்வு ஆசிரியர்கள் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2026

ஒரே நாளில் இரண்டு சிறப்பு ‘டெட்’ தேர்வு ஆசிரியர்கள் குழப்பம்

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான, சிறப்பு ‘டெட்’ தேர்வு டிச.,20ல் நடக்கும் நிலையில், ஒரே நாளில் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடப்பதால், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன், பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளியில் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ‘டெட்’ தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, செப்.,1ல் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணிபுரியும் ஆசிரிர்களுக்கு, சிறப்பு ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


 வரும் டிச., 20ம் தேதி, சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், ‘டெட்’ முதல் தாள் தேர்வு காலையிலும், இரண்டாம் தாள் தேர்வு மாலையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடப்பதால், இரண்டு தகுதித் தேர்வுகளையும் எழுத விரும்பும் ஆசிரியர்களுக்கு, இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ஒரே நாளில் இரண்டு தேர்வை நடத்தினால், எப்படி தேர்வு எழுத முடியும். ஒரு தேர்வுக்கு ஒரு மையமும், மற்றொரு தேர்வுக்கு வேறு மையத்தையும் ஒதுக்கினால், இரண்டு தேர்வுகளை எழுத இயலாது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மற்ற தேர்வுகளால் சிக்கல்

ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறப்பு ‘டெட்’ தேர்வை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த வேண்டும். டிச., முதல் வாரத்தில் நடத்தினால், ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கிடைக்காது. இரண்டாவது வாரம், மத்திய அரசின் ‘சிடெட்’ தேர்வு நடக்கிறது. அதன்பின், டிச.,14 முதல் 19 வரை யு.ஜி.சி., நெட் தேர்வு நடக்கிறது. மாத இறுதி அரையாண்டு விடுமுறை நாள். வேறு தேதி இல்லாததால், டிச.20ல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி