School Morning Prayer Activities - 15.10.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2026

School Morning Prayer Activities - 15.10.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.2026

திருக்குறள்

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:52. தெரிந்து வினையாடல்

குறள் எண்:511

குறள்:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.


பொருள்:

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
பழமொழி :

The old fox is caught at last.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. எனது ஓய்வு நேரத்தை நல்ல புத்தகங்களை படிப்பதற்காக ஒதுக்குவேன். 

2. எத்தனை துன்பம் வந்தாலும் என் கல்வியை நான் இழக்க மாட்டேன்.

பொன்மொழி : 

 “உழைப்பைத் தெய்வமாக மதித்து, தொழிலைத் தவமாகக் கருதி, திறமையை வெற்றியாக்குவோம்.”

Thought for the Day :

 “Let us honour hard work as divine, regard our profession as a form of devotion, and transform our skills into success.”

பொது அறிவு : 

1. மனித கண்ணின் நிறத்தை தீர்மானிக்கும் பகுதி எது? 

கருவிழி. 

2. உலகின் பறக்கும் ஒரே ஒரு பாலூட்டி எது? 

வௌவால்

English words :

1. Unclear – not easy to understand – புரியாத. 

2. Tenacious – Persistent – விடாப்பிடியான

புவியியலும் சுற்றுசூழலும் :

அந்த கவுன்சிலர்கள்:
தங்கள் வார்டு மக்களின் தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவர்.
பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பங்கேற்பர்.
குடிநீர், சாலை, தெருவிளக்கு, தூய்மை போன்ற உள்ளூர் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுப்பதில் பங்கேற்பர்.

NMMS :

MAT 

உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று ____________________ என அழைக்கப்படுகிறது. 

(1) மழை 

(2) சூறாவளி

 (3) பருவக்காற்று 

(4) புயல் 

விடை: (4) புயல்

அக்டோபர் 15

இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .

APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.

2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.

இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 

நீதிக்கதை

 ### ஒற்றுமையே பலம்!

ஒரு அழகான காட்டில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அவை தினமும் உணவைச் சேகரித்து தங்கள் புற்றில் சேமித்து வைத்தன.

ஒரு நாள், ஓர் எறும்பு பெரிய அரிசி மணியைக் கண்டது. அதைத் தனியாகத் தூக்கிச் செல்ல முயன்றது. ஆனால், அதனால் முடியவில்லை.

உடனே அது மற்ற எறும்புகளை உதவிக்கு அழைத்தது. எல்லா எறும்புகளும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அரிசி மணியைத் தூக்கின.

சிறிது நேரத்தில், அவை அரிசி மணியைப் பாதுகாப்பாகத் தங்கள் புற்றுக்குக் கொண்டு சென்றன.

தனியாகச் செய்ய முடியாத வேலையை, அனைவரும் இணைந்து எளிதாகச் செய்து முடித்ததை எண்ணி எறும்புகள் மகிழ்ந்தன.

அன்று முதல், அவை எப்போதும் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்ந்தன.

நீதி: ஒற்றுமையே பலம்! 🌟

இன்றைய செய்திகள்

15.10.2026

🗒️மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்கக்கூடாது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

🗒️ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🗒️இந்தியாவின் கலாசார பாரம்பரியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் அதிகரிப்பு என பிரதமர் மோடி பெருமிதம் .

விளையாட்டுச் செய்திகள்
🏀பாரா ஆசிய விளையாட்டு: இந்திய அணியில் 166 வீரர்-வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர்.

🏀பெனெஸ்டா ஓபன் டென்னிஸ்: தீப்தி வெங்கடேசன் அதிர்ச்சித் தோல்வி.

Today's Headlines

🗒️ Minister Arunraj said that medicines and tablets should not be given without a doctor's prescription.

🗒️ The Union Cabinet has approved a Diwali bonus equal to 78 days' wages for railway employees.

🗒️ Prime Minister Modi expressed pride that India's cultural heritage is receiving greater international recognition.

🏀 Sports News
🏀 Para Asian Games: A total of 166 Indian athletes will take part in the games.

🏀 Benesta Open Tennis: Deepti Venkatesan suffered a surprising defeat.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி