சிஎஸ்ஐஆர் யுஜிசி ‘நெட்’ தேர்வு தேதி வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2026

சிஎஸ்ஐஆர் யுஜிசி ‘நெட்’ தேர்வு தேதி வெளியீடு

 

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்​வுக்​குப் பாடப்​பி​ரிவு​கள் வாரியாகத் தேர்வு தேதி​களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்​ளது.

உதவி பேராசி​ரியர் பத​வி​யில் அறி​வியல், கணித பாடப் பிரிவு​களுக்​காகச் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது. கலை பாடங்​களுக்​கான யுஜிசி நெட் தேர்வை போன்று இது​வும் ஆண்​டுக்கு 2 முறை (ஜூன், டிசம்​பர்) நடத்​தப்​படு​கிறது.

சிஎஸ்ஐஆர் யுஜிசி தேர்​வுக்​கான டிசம்​பர் தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​கள் ஏற்​கெனவே பெறப்​பட்​டன. இந்​நிலை​யில், பாடப் பிரிவு​கள் வாரியாகத் தேர்வு தேதி​களைத் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி, சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு டிசம்​பர் 19, 22, 27 தேதி​களில் ஒவ்​வொரு நாளும் 2 ஷிப்​டுகளாக நடத்​தப்​பட உள்​ளன. வாழ்​வியல் அறி​வியல், உயிரி தொழில்​நுட்​பப் பாடத்​துக்​கான தேர்வு டிசம்​பர் 19-ம் தேதியும், வேதி​யியல், நிலத்​தியல், காலநிலை, கடல் அறிவியல், விண்​வெளி அறி​வியல் தேர்வு டிச.22-ம் தேதியும், கணிதம், இயற்​பியல் பாடங்​களுக்​கான தேர்வு 27-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி