JEE - 2027 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (22.11.2026 - ஞாயிறு) கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2026

JEE - 2027 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (22.11.2026 - ஞாயிறு) கடைசி நாள்

JEE - 2027 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (22.11.2026 - ஞாயிறு) கடைசி நாள்

சந்தேகங்களும்.. 🤔 பதில்களும்.. 📝


*யாரெல்லாம் JEE தேர்வு எழுத முடியும்?? ✒️*


மார்ச் 2025 & 2026 -யில் +2 தேர்ச்சி பெற்ற, 2027-யில் +2 தேர்வு எழுத உள்ள Phy, Che Maths Group மாணவ மாணவிகள் அனைவரும் இத்தேர்வினை எழுதலாம்.


*ஏன் JEE தேர்வு எழுத வேண்டும்??*🖊️


போட்டிகள் மிகுந்த எதிர்காலத்தில் பொறியியல் துறையில் ஆகச்சிறந்த வல்லுநராக உருவாகிட விரும்பும் மாணவ மாணவிகள் JEE தேர்வு எழுதுவது அவசியம்.


*JEE Mains தேர்வு எழுத OBC-NCL அவசியமா? ஏன்??*


ஆம்.. ஆனால் OBC-NCL சான்று கிடைக்க தாமதம்.. ஆகவே OBC-NCL சான்றுக்கு விண்ணப்பித்துள்ள ஒப்புகைச் சீட்டு இருந்தால் கூட போதும். அதுவும் இல்லை எனில், இசேவை மையத்தில் கடந்த 23.11.2025 க்கு பிறகு பெற்ற Income Certificate இருந்தால், அதில் உள்ள எண்ணை குறிப்பிட்டு OBC-NCL என விண்ணப்பிக்கவும். Income certificate யும் இல்லை எனில், இசேவை மையத்தில் பெற்ற உங்கள் BC / BCM / MBC / DNC சாதிச்சான்றில் உள்ள எண்ணைக் குறிப்பிட்டு, OBC-NCL என விண்ணப்பிக்கவும்.


*ஏன் OBC-NCL முக்கியம்??*


BC / BCM / MBC / DNC குழந்தைகள் அனைவரும் OBC-NCL தான். OBC-NCL என குறிப்பிட்டு விண்ணப்பித்தால் தான் எளிதில் Seat கிடைக்கும். ஆகவே General என விண்ணப்பிக்க வேண்டாம்.


*யாரெல்லாம் General EWS பிரிவில் விண்ணப்பிக்கலாம்??*


+2 பயிலும் SC / SCA / ST / BC / BCM / MBC / DNC பிரிவுகளைச் சாராத OC குழந்தைகள் மட்டும் கீழே உள்ள செய்தியை படிக்கவும்.


நீங்கள்  General EWS சான்றுக்கு விண்ணப்பித்து, JEE தேர்வுக்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு IIT or NIT-யில் Seat உறுதியாகக் கிடைக்கும்.


EWS சான்று இல்லாதவர்களும் General EWS என்றே விண்ணப்பிக்கலாம்.


https://examinationservices.nic.in/JeeMaink2027/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr/RK0fiT9U+NCx0+00pns5


JEE தேர்வுக்கு Late fee ரூ.500 இல்லாமல் விண்ணப்பிக்க நாளை (22.11.2026 - ஞாயிறு) கடைசி நாள்.  


தாமக்கட்டணம் ரூ.500 கூடுதலாகச் செலுத்தி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.11.2026 (வியாழன்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி