MSHM TO BEO ஆக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET II தேர்ச்சி ) கட்டாயம் - அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2026

MSHM TO BEO ஆக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET II தேர்ச்சி ) கட்டாயம் - அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

 

MSHM TO BEO ஆக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET II தேர்ச்சி ) கட்டாயம் - அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில் 50% பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யும் பொருட்டு, 2026 ஆம் ஆண்டில் 01.01.2026 நிலவரப்படி, TET தேர்வு தேர்ச்சியை நிறைவு செய்யாத நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு

மாநில அளவில்  தகுதிவாய்ந்தோர் பட்டியலானது (Panel List), 

கோருதல் சார்பாக

26-02-2026 ல் தொடக்கக்கல்வி இயக்குநரால் செயல்முறைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் திரு. சா. முத்தமிழ்ச்செல்வன் என்பார் தொடர்ந்த 

WP NUMBER 9859/2026 வழக்கில், மனுதாரரின் பிரதான கோரிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.


*வழக்கின் பின்னணி:*


நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக (BEO) பதவி உயர்வு வழங்கும்போது, RTE ACT 2009 சட்டப்படியும் மற்றும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 01-09-2025 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், TET II தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே BEO ஆக பதவி உயர்வினை வழங்க வேண்டும் எனக் கோரி மனுதாரர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


அதாவது, UG + B.Ed. + துறைத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளுடன் TET II தேர்ச்சியும் பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே BEO ஆக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதே மனுதாரரின் பிரதான கோரிக்கையாகும்.


*அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :-*


1.இவ்வழக்கு தொடர்பாகப் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் தரப்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 29-10-2026 ல் எதிர்மனு (Counter Affidavit) தாக்கல் செய்யப்பட்டுள்ளது


2.அதில், சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலை எண் 87, நாள் 13.03.2026 - ன் படி , நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து BEO ஆக பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் (TET II தேர்ச்சியையும் சேர்த்து ) பெற்றிருக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3.மனுதாரரின் பிரதான கோரிக்கையை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதால், இதற்காகத் தனியாக மற்றுமொரு நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியம் எழவில்லை எனவும் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


*இதன் முக்கியத்துவம்:*


*அதாவது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதிகளில், TET II தேர்ச்சியும் கட்டாயம் என்பது இதன் மூலம் நடைமுறைக்கு வருகிறது*


எனவே, அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விரைவில் முடித்து வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி