திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:525
குறள்:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
பொருள்:
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
True friendship never fails.
உணமையான அன்பு என்றும் தோற்பதில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என்னால் முடிந்த வரை இயற்கையை பாதிக்காத வகையில் நடந்துகொள்வேன் .
2. என் பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை அசுத்தப் படுத்தாமல் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
“வாழ்க்கையில் ஏற்றும் ஒவ்வொரு நல்லெண்ணமும் ஒரு தீபமே; பிறர் வாழ்வில் ஒளி ஏற்றுவதே உண்மையான தீபாவளி!
Thought for the Day :
Every good thought is a lamp we light in life; bringing light into the lives of others is the true spirit of Diwali!
பொது அறிவு :
1." இந்தியாவின் நோபல் விருது" என்று அழைக்கப்படும் விருது எது?
பாரத ரத்னா விருது.
2. தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலைய விருதைப் பெற்ற காவல் நிலையம் எது?
மதுரை
English words :
1. Pragmatic - நடைமுறைக்கேற்ற - Practical
2. Tenacity - விடாமுயற்சி-Persistence
புவியியலும் சுற்றுசூழலும் :
மக்கும் கழிவுகள் உரமாக்க படுகின்றன
உணவுக் கழிவுகள் மற்றும் இலைகள் போன்ற மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க படுகிறது.
காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்காக அனுப்பப்படுகின்றன.
NMMS :
MAT
விடை : (1)
நவம்பர் 06
- போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்
நீதிக்கதை
பொறாமை கொண்ட மயிலும் சிறிய குருவியும்
ஒரு அழகான காட்டில் ஒரு மயிலும் ஒரு சிறிய குருவியும் மற்றும் அநேக அழகிய பறவைகளும் வாழ்ந்து வந்தன.
மயில் தனது அழகான தோகையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. குருவியோ சிறியதாக இருந்தாலும், இனிமையாகப் பாடும் திறமை கொண்டிருந்தது.
ஒருநாள் காட்டில் உள்ள பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி ஒரு பாடல் போட்டியை நடத்தின. குருவி அழகாகப் பாடியது. அதைக் கேட்ட பறவைகள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் கைதட்டின.
இதைக் கண்ட மயிலுக்குக் குருவியின் மீது பொறாமை ஏற்பட்டது.
“என்னிடம் அழகான தோகை இருக்கிறது. ஆனால், இந்தச் சிறிய குருவியை எல்லோரும் பாராட்டுகிறார்களே!” என்று மயில் வருத்தப்பட்டது.
அடுத்த நாள் குருவி பாடுவதற்காக மரக்கிளையில் அமர்ந்தது. அப்போது மயில் அதன் அருகில் சென்று, “உன் குரல் அவ்வளவு சிறப்பாக இல்லை. நீ பாடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியது.
குருவி வருத்தமடைந்து அமைதியாக இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு காட்டில் பலத்த மழை பெய்தது. ஒரு சிறிய குருவிக்குஞ்சு தனது கூட்டிலிருந்து தவறி கீழே விழுந்தது. அதைக் கண்ட மயில், பொறாமையினால் கண்டும் காணாதது போல் சென்று விட்டது. அதை அருகில் இருந்து பார்த்த ஒரு கிளி குருவியின் தாயை வேகமாக ஓடி அழைத்து வந்தது.
அங்கு வந்த தாய்க்குருவி தனது இனிய குரலில் மற்ற பறவைகளை அழைத்தது. பறவைகள் அனைத்தும் ஒன்றுகூடி, குருவிக்குஞ்சை பாதுகாப்பாகக் கூட்டில் சேர்த்தன. அப்போது கிளி மயில் செய்ததை மற்ற பறவைகளிடம் கூறியது. அதைக் கேட்ட வயசான ஆந்தை மயிலை திட்டியது. பொறாமை ஒரு எலும்புருக்கி அது பிற உயிர்களின் உயிரை எடுக்கும் என்று கூறியது.
மயில் தன் தவறை உணர்ந்தது.
“குருவியின் திறமையைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன். ஆனால், அதன் அன்பும் மற்றவர்களுக்கு உதவும் குணமும் எவ்வளவு சிறந்தவை! இன்று அதன் குழந்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றப் பட்டதே” என்று நினைத்தது.
மயில் குருவியிடம் மன்னிப்புக் கேட்டது. குருவியும் மயிலை மன்னித்தது.
அன்று முதல் மயில் மற்ற பறவைகளின் திறமைகளைப் பாராட்டத் தொடங்கியது. காட்டில் உள்ள பறவைகள் அனைத்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.
இன்றைய செய்திகள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி