TNPSC : குரூப்-2, 2ஏ தேர்வில் 3.87 லட்சம் பேர் பங்கேற்பு: முடிவுகள் 2 மாதத்தில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2026

TNPSC : குரூப்-2, 2ஏ தேர்வில் 3.87 லட்சம் பேர் பங்கேற்பு: முடிவுகள் 2 மாதத்தில் வெளியீடு.

 

தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற குரூப்-2, 2ஏ தேர்​வில் 3.97 லட்​சம் பேர் கலந்​து​ கொண்​டனர். வினாத்​தாள் சற்று கடினமாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தகவல் தெரி​வித்​தனர். 2 மாதத்​தில் முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் பிர​பாகர் தெரி​வித்​தார்.

சார் பதிவாளர், உதவி ஆய்​வாளர் உட்​பட பல்​வேறு பத​வி​களில் காலியாக உள்ள 846 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான டிஎன்​பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்​நிலைத் தேர்வு மாநிலம் முழு​வதும் 1,647 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. தேர்வு எழுத மொத்​தம் 4.90 லட்​சம் பேர் பதிவு செய்​தனர். அதில் 3.97 லட்​சம் பேர் (81.1%) கலந்​து​கொண்​டனர். 92,595 பேர் பங்​கேற்​வில்லை. சென்​னை​யில் 173 மைங்​களில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர்.

அரசுத் தேர்​வு​களில் ஆள்​மாறாட்​டத்தை தடுக்க விடைத்​தாள்​களில் தேர்​வர்​களிடம் கைரேகை பெறும் நடைமுறை அமலில் உள்​ளது. நேற்று நடந்த குரூப்-2, 2ஏ தேர்​வின்​போது சென்​னை​யில் உள்ள ஒரு மையத்​தில் கண்​காணிப்பு அதி​காரி​கள் கைரேகைக்கு பதில் தேர்​வர்​களிடம் கையெழுத்து பெற்​றதாக புகார்​கள் எழுந்​தன. இத​னால் அந்த மையத்​தில் தேர்வு எழுதி​ய​வர்​கள் தங்​களது விடைத்​தாள்​கள் திருத்​தப்​படுமா என்ற அச்​சத்​தில் உள்​ளனர். இது​குறித்து விசா​ரணை நடத்தி, நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என தேர்​வர்​கள் வலியுறுத்​தினர்.

வினாத்​தாள் கடினம்: வினாத்​தாள் சற்று கடினமாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். இது​குறித்து கேட்​டபோது, “தமிழ் வினாக்​கள் மிகவும் கடினமாக இருந்​தது. கணிதத்​தில் கேட்​கப்​பட்ட கேள்​வி​கள் நன்கு சிந்​தித்து பதிலளிக்​கும்​படி இருந்​தன. பொது அறி​வுப் பகுதி​யிலும் சில கேள்​வி​கள் மிகவும் ஆழமாக யோசித்து விடை அளிக்​கும் வகை​யில் இருந்​ததால் தேர்​வுக்கு கூடுதல் நேரம் தேவைப்​பட்​டது. சில தேர்​வறைகளில் வினாத்​தாள் சற்று தாமத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளன. வினாத்​தாளை சரியாக 9.15 மணிக்கு கொடுக்க டிஎன்​பிஎஸ்சி நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றனர்.

முன்​னதாக, சென்னை சேத்​துப்​பட்​டில் உள்ள மையத்​தில் தேர்​வின்​போது டிஎன்​பிஎஸ்சி தலை​வர் பிர​பாகர் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “குரூப்-2, 2ஏ முதல்​நிலைத் தேர்வு விடைத்​தாள்​கள் திருத்​தப்​பட்டு 2 மாதத்​தில் முடிவு​கள் வெளி​யிடப்​படும்” என்​றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி