33 ஆயிரம் சிறுவர்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்குப்பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2013

33 ஆயிரம் சிறுவர்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்குப்பதிவு.

இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சமீபகாலமாகஅதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல், மட்டும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட, 33 ஆயிரம் சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள். அதிகபட்சமாக, 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி