பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது: விழுப்புரம் சி.இ.ஓ. அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2013

பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது: விழுப்புரம் சி.இ.ஓ. அறிவுரை

பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்றஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற 18,000 பேர்களுக்கு ஆன் லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணையைசென்னையில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 596 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறை, பாடத்திட்டம் குறித்தநிர்வாக பயிற்சி முகாம் ஜனவரி 19, 20ம் தேதிகள் என இரு நாள்கள் நடைபெற்றன. விழுப்புரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது. சனிக்கிழமைதொடங்கிய இப்பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி பேசியது: மாவட்டத்திலுள்ள 509 அரசு பள்ளியில் பணிபுரியவுள்ள நீங்கள், மாணவர் கல்விக்கு முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் மீது குறை கூறக்கூடாது. பள்ளிக்கு ஆசிரியை, ஆசிரியர்கள் சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்டுகளைஅணிந்து வரக்கூடாது. ஆசிரியர்கள் சட்டையில் பட்டன்களை முறையாக போட வேண்டும்.மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க பாடுபட வேண்டும்  என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி