தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, பி.எட். கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.பாலசுப்பிரமணியன் தலைமையில்
குழு அமைக்கப்பட்டு, கட்டணம்நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தரச்சான்று பெற்ற கல்லூரிகள்ரூ.46 ஆயிரத்து 500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41 ஆயிரத்து 500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பி.எட். கல்லூரிகள் தொடங்கப்படும். மாநிலத்தில் மொத்தம் 706 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அதில், அரசுக் கல்லூரிகள் ஏழும், உதவிபெறும் கல்லூரிகள் 14-ம், தனியார் கல்லூரிகள் 685-ம் அடங்கும் என்றார் அமைச்சர் பழனியப்பன்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி