டி.இ.டி., வினாத்தாள் மோசடி: மேலும் 5 பேர் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2013

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: மேலும் 5 பேர் கைது.

டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், தளியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி., உத்தரவின்படி டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார் டாஸ்மாக் ஊழியர் இருவர் உட்பட ஆறு பேரை, 17ம் தேதி கைது செய்தனர்.வினாத்தாள் மோசடி தொடர்பாக, நேற்று முன்தினம், 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் ஐந்து பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை செய்ததில், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களில் பெரும்பாலான வினாக்கள் தேர்வில் வந்துள்ளது தெரியவந்து உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சில அலுவலர்களும், போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 comments:

  1. TRB um GOVT um vaayavea thiraka maatraagalea . . .
    Court la Case Poduvathu mattomea ithatku Theervu . . .
    illaiyeanraal . . .
    panam iruppor mattomea GOVT POST KU vara mudium.
    Panam koduthu GOVT POST KU vanthavan Lanjam thaan vaanguvaan.
    VAALGA TRB
    VALARGA TET

    ReplyDelete
  2. எதுக்கு Re Exam ?Re Exam வச்சா மட்டும் அப்படியே....அவஅவன் உயிரக்கொடுத்து நல்லா எழுதிருக்கான்...யார் தவறு செய்தார்களோ அவர்களை கண்டுபிடித்து TET தேர்வு இனிமேல் எழுதவிடாமல் செய்ய வேண்டும்,மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் இனிமேல் இது போன்று நடக்காமல் இருக்க TRB தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,TET தேர்வில் பாஸ் ஆவது சாதாரண விசயம் இல்லை அதனால் ஒரு சிலர் செய்த தவறுக்காக பலாயிரம் பேர் பாதிக்கப்படக்கூடாது.உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இங்கு RE EXAM கேட்பவர்கள் அனைவரும் தேர்வினை சரியாக எழுதாதவர்களே..தேர்வை நன்றாக எழுதியவர்கள் யாரும் கேட்கவில்லை.அதனால் முதலில் நன்றாக படித்து அடுத்த தேர்விலாவது வெற்றி பெறுங்கள் வெட்டி வேலை வேண்டாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி