தொலைதூரக்கல்வி பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2013

தொலைதூரக்கல்வி பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்ட பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்து முடிந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றன. பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். ஏ–10, ஏ–11, ஏ–12, சி–11, சி–12 என்ற எண்களில் தொடங்கும் பதிவு எண் உடையவர்கள் மட்டும் மறுமதிப்பீடு செய்யலாம்.இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.750. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். மேலும் தொலைதூரக்கல்வி தகவல் மையத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீட்டிற்கும் 16–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி