தமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வு 88ஆயிரம் பேர் எழுதினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2013

தமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வு 88ஆயிரம் பேர் எழுதினர்.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வும், ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வும்  நடந்தன. 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.  பொது தேர்வுகளில்
தோல்வி அடையும் மாணவர்களுக்காக தனிதேர்வுகள் செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தனி தேர்வுகள் நேற்று தொடங்கின.  பிளஸ் 2 தேர்வில் 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர்.இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. இன்று தமிழ் 2ம் தாள் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது.பத்தாம் வகுப்பு தேர்வை 46 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. இன்று தமிழ் 2ம் தாள் நடக்கிறது.  காலை 10க்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். வழக்கமான பொது தேர்வுகள் போலவே மேற்கண்ட தேர்வுகளிலும் கேள்வித்தாள் படித்து பார்க்க, மற்ற விவரங்களை பூர்த்தி செய்ய 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது.முதல் முறையாக இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விடைத்தாள்களில் அந்தந்த மாணவ, மாணவிகளின் படம் மற்றும் பார்கோடு இடம் பெற்றிருந்தன.இதையடுத்து, மார்ச் மாதம் நடக்க உள்ள பொதுத் தேர்விலும் விடைத்தாளில் மாணவர்களின் படம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி