பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு.

பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது.இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமிழக அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை
அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே புதிய பாடத்திட்டம் தயாரிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தனித்தனி குழுவினர்கள் அந்த பாடத்திட்டத்தை தயாரித்தனர்.பின்னர் அந்த பாடத்திட்டம் கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமானவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளன.இறுதிசெய்யும் கூட்டம்பாடத்திட்டம் இறுதி செய்வதற்கான கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு பின்னர் பாடத்திட்டம் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதப்படவேண்டும். இந்த பாடப்புத்தகங்கள் எழுதி முடித்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவேண்டும். எனவே வருகிற கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள் அமல்படுத்தப்படாது.இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் 2015-2016-ம்கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி