பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2013

பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம் இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில், தேர்வுத் துறை வழங்கியது. இந்த
விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேகஇணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.அடுத்த வாரத்தில் இருந்து, தேர்வெழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்தப் பணி, நவம்பர், முதல் வாரம் வரை நடக்கும் என, தெரிகிறது. இணையதளத்தில், விவரங்கள் ஏற, ஏற, அது குறித்த புள்ளி விவரங்களை, உடனுக்குடன் பெறவும், தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பணிகளை, தனியார் நிறுவனம் ஒன்று செய்து கொடுக்கிறது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில்,நவ., 15ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த புள்ளி விவரங்கள் தயாராகி விடும். பொதுத்தேர்வுக்கு, போதுமான கால அவகாசம் இருப்பதால், ஒவ்வொரு பணியையும், நிதானமாக செய்வோம், என, தெரிவித்தார். சமீபத்தில் நடந்த பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வுகள், ஒரே தேதிகளில் நடந்தன. இதில், எவ்வித குளறுபடிகளும் ஏற்படவில்லை. இதேபோல், பொதுத் தேர்வுகளையும்நடத்தலாமா என, தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது. எனினும்,இதுகுறித்து, தற்போது வரை, எவ்வித முடிவும் எடுக்கவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி