தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில்
தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.
முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் இரண்டாயிரத்து 908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9 ஆயிரத்து 688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.
முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடா ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62 ஆயிரத்து 190, பெண்கள் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 800) பங்கு பெற்றனர். அவர்களில் 12 ஆயிரத்து 433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 954 பேர் ஆண்கள், இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேர் பெண்கள். இவர்களில் 14 ஆயிரத்து 496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில்,4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.
புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3 ஆயிரத்து 857 பேரும் (642 ஆண்கள், 3,215பெண்கள்), இரண்டாம் தாளை 4 ஆயிரத்து 134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
paper 1 pass pannunavanga maximam endha seniority la adhigam irukkanga pleas sollunga
ReplyDeleteI think 2007 is the current seniority.
ReplyDeletesir, I pass paper 2
ReplyDeleteTamil.
and I finishesd only DtEd,with B.Lit.
can I got BT Post?
my weightage 77
Sir...i.scored 95 in 1st paper.employment entey is 2010.i depend the army quata..and belong sc.can i get job?
ReplyDeletesir only B.Ed candidates eligible for paper 2
ReplyDeletePaper1mark108 can I get job my seniority 2004 mbc
ReplyDelete