பள்ளி தலைமையாசிரியர்களுக்கான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

பள்ளி தலைமையாசிரியர்களுக்கான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம்.


ராஜஸ்தான் மாநிலத்தில் பாகர்என்ற இடத்தில், பிராமல் தலைமைத்துவ படிப்பிற்கான கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.Piramal School of Leadership என்று அழைக்கப்படும்
இந்தக் கல்வி நிறுவனம், அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்காக, மூன்று வருட Principal Leadership Development Program என்ற படிப்பை வழங்குகிறது.

இதன்மூலம், அவர்கள், தங்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளவும்முடியும்.மேலும், தலைமையாசிரியர்களுக்கு, கல்வி தலைமைத்துவம், மாவட்ட கல்வி மேலாண்மை, பள்ளி வளர்ச்சிக்கான பயிற்சி, கற்பித்தலுக்கான செயல்திட்டம், கொள்கை வடிவமைப்புமற்றும் கல்வி அளவீடு ஆகிய பிரிவுகளில், முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கவும் Piramal School of Leadership கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி