கவனிக்க அரசுக்கு நேரமில்லை : 25 டி.இ.ஓ., பணியிடம் காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

கவனிக்க அரசுக்கு நேரமில்லை : 25 டி.இ.ஓ., பணியிடம் காலி.


தமிழகத்தில், 25, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக, நிரப்பப்படாமல் உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனம், 25 சதவீதம் நேரடியாகவும், 25 சதவீதம், அரசு தேர்வு மூலமாகவும்,

50 சதவீதம், பணி மூப்பு அடிப்படையிலும் நிரப்பப்படுகிறது.

தற்போது, 25 இடங்களில், டி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது; பல்வேறு காரணங்களை, உயரதிகாரிகளிடம் கூறி, இந்த பணியிடத்தை நிரப்ப விடாமல், சிலர் தடுத்து வருகின்றனர்.பெயர் வெளியிட விரும்பாத, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஒருவர்கூறியதாவது: சென்னை, தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உட்பட, பல இடங்களில், 25 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாவட்டத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, நிதியுதவி, அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருவது; ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது; தேர்வுகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை, டி.இ.ஓ.,க்கள் மேற்கொள்ள வேண்டும். டி.இ.ஓ., இல்லாத இடங்களில், பொறுப்பு அலுவலராக, தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள், இரு பணிகளை கவனிப்பதால், மாணவர்களின் கல்வித் தரத்தில், முழு கவனம் செலுத்த முடிவதில்லை; பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இன்னும், 10 நாட்களில், பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மாணவர் நலன் காண, பல்வேறு மாற்றங்களை, கல்வித் துறை இயக்குனரகம், நடப்பாண்டில் கொண்டு வந்துள்ளது. அதுபோல, மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடம் பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி