பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு.


பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர்,'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை,
தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள மையத்திற்கு, நேரில் சென்றும், இணையதளம் வழியாகவும், விண்ணப்பிக்கலாம். தனியார் இணையதள மையங்களில், விண்ணப்பிக்கக் கூடாது. மாவட்ட வாரியான, சிறப்பு மையங்கள் விவரங்களை, www.tndge.in என்ற, தேர்வுத் துறை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் சேர்த்து, செலுத்த வேண்டும். இந்த மாணவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும்; இதன் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி