ஜூன் 16 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

ஜூன் 16 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.


2014-15-ம் ஆண்டில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இம்மாதம் ஜூன் 16-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு முதன்மைச் செயலர் த.சபிதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி நிரவல் இம்மாதம் 16-ம் தேதி நடைபெறும். அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு 18-ம் தேதியும், அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 19-ம் தேதியும், அரசு- நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு இம்மாதம் 20-ம் தேதியும் நடைபெறுகிறது. அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூன் 22-ம் தேதியும், அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள்) கலந்தாய்வும் ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது. முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம்விட்டு மாவட்டம்) கலந்தாய்வு 24-ம் தேதியும், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 25-ம் தேதியும் நடைபெறுகின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கான கலந்தாய்வு இம்மாதம் 26-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) மாறுதல் கலந்தாய்வு 27-ம் தேதியும், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இம்மாதம் 29-ம் தேதியும் நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கலந்தாய்வுகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள்) கலந்தாய்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி