டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு.


தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎட் பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில், டிஇஓ தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த விடைகள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பும் தேர்வர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் ஆவணங்களுடன் தெரிவிக்கலாம் என்றும், இந்த காலக்கெடுவுக்கு பின்னர் வரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி