பரோடா வங்கியின் துணை நிறுவனத்தில் அதிகாரி பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

பரோடா வங்கியின் துணை நிறுவனத்தில் அதிகாரி பணி


பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான BOBCARDS லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 70 அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officers

காலியிடங்கள்: 70

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: வருட வருமானமாக ரூ.2,40 லட்சம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை Debit அல்லது Credit அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bobcards.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014

ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bobcards.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி