உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்.


இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் :
2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து முறையான ஆணை பெற்றபின் அத்தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி