யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு துறைகளில் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
இதன்படி, இந்த ஆண்டு 148பேருக்கு பத்ம விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகிய இருவரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. யோகா மாஸ்டர் ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நடிகர்கள் திலிப்குமார், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டுத் துறையைப் பொறுத்த வரை ஹாக்கி அணியின் கேப்டன் சர்தாரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, செஸ் கிராண்ட் மாஸ்டர் கிருஷ்ணன் சசிகிரண், மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில்இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார் ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Anaivarukum en valthugal
ReplyDeleteAkilan sir pg welfare list pati solunga
ReplyDeletePlease upload 10 science Practical materials.
ReplyDeleteThanking you......
Please anybody upload 10 science Practical
ReplyDeletematerials.
Thanking you......