பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசாணை 266–ஐ திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொன்முடி, திருஞானகணேசன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் மணி வாசகம், பிரபாகரன், வின்சென்ட், கிருஷ்ணன், பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் இளங்கோவன், இடைநிலை ஆசிரியர் சங்க முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.உண்ணாவிரதத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:–ஆசிரியர்கள் எந்த நோக்கத்திற்காக என்னை அழைத்து இருக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் புரியும்.
இந்த அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க வில்லை.வருகிற சட்டசபை தேர்தல் மூலம் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய் மொழியாக தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்தப்படும்.தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பணியில் சமூக விரோதிகள் தலையீடு அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை களைய வேண்டும்.அரசு பள்ளியில் 30 வருடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்து சிறப்பு நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். அதுபோல அரசுஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அந்த குறை களையப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் இ.சி.சேகர், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteதிமுக ஆட்சிக்கு வந்தால். .....???????!!!!!!!!!
DeleteAll political party before the election said like that after the election?????????????
ReplyDelete