சி.பி.எஸ்.இ., தலைவர் தேர்வு செய்ய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2015

சி.பி.எஸ்.இ., தலைவர் தேர்வு செய்ய அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 15,500 பள்ளிகள் உள்ளன. மேலும், பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மருத்துவக் கல்லுாரி நுழைவுத்தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.


சி.பி.எஸ்.இ., தலைவராக இருந்த வினித் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2014 டிசம்பர் முதல், தலைவர்பதவி காலியாக உள்ளது. மத்திய உயர்கல்வித் துறை அதிகாரி ஜேஷு குமார், பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அளித்த, புதிய தலைவருக்கான பட்டியலை, இரு மாதங்களுக்கு முன், உயர்கல்வித் துறை நிராகரித்து விட்டது.


கல்வி மற்றும் அனுபவத் தகுதியை சரியாகக் குறிப்பிடவில்லை என, காரணம் கூறப்பட்டது.இதையடுத்து, மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மத்திய மனித வள அமைச்சக தேடல் குழு வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., தலைவர் பதவிக்கு, 'மத்திய கல்வித்துறை இயக்குனர் பொறுப்புக்கு இணையாக, பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி