வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை(அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு (அக்.24) மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.இதையடுத்து வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24) 4-ஆவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி