இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2015

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது.இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம்கூறியதாவது:


இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2,186 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 50 நாள்களுக்குள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆஷிம் குரானா தெரிவித்தார்.இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி