தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக பல்வேறு பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு புகார் சென்றது.இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில்உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான விவரங்களை தரும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 1,881 பள்ளிகளும், 256 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 267 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 87 அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.இவற்றில், 336 தொடக்கப் பள்ளிகள், 890 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், 91 மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,317 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி