பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2018

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?

கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி இதன் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல்விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மே 13-ம்தேதி வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல்விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாககூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களாக சில பைசாக்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஈரான் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருக்கிறது.

மேலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த இரண்டு காரணங்களாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில அரசியல் காரணங்களாலும் விலை உயர்த்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி