திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்


எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில் காலாண்டு வரையிலான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.1ல் நடக்க இருந்த திறனாய்வு தேர்வு கஜா புயல் பாதிப்பால் டிச.15ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு டிச.10ல் தொடங்கி, 22-ல் முடிகிறது. தேர்வுகளுக்கு இடையில் திறனாய்வு தேர்வை வைத்துள்ளதால், மாணவர்கள் எந்த தேர்வுக்கு படிப்பது என குழம்பியுள்ளனர். எனவே, அரையாண்டு முடிந்த பிறகு விடுமுறை நாளிலோ, அல்லது ஜனவரி மாதத்திலோ இந்த தேர்வை வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி