பாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2019

பாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள உத்தரவு


போதிய பாடவேளை இல்லாத, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,கீழ்நிலை வகுப்புகளை கையாள அனுமதிப்பதோடு, இது சார்ந்த விபரங்களை, வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு, ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம்,பாடவேளை எண்ணிக்கைகுறித்து விளக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல பள்ளிகள் பின்பற்றாததால், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டியுள்ளது.எனவே, அனைத்து நிலை வகுப்புகளுக்கும், அரசாணையின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை மூலம், சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசாணையின்படி, தொடக்க கல்வித்துறையில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிப்பது அவசியம்.கூடுதலாக இருந்தால், தனிப்பிரிவு துவங்கலாம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.ஆங்கில பிரிவில், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்.

இதை விட குறைவாக இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுடன், ஆங்கில வழி பாடப்பிரிவை இணைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதுமுதுகலை ஆசிரியர்கள், வாரத்துக்கு 28 பாடவேளைகள் கையாள வேண்டும். மேல்நிலை வகுப்புகளில், குறைவான பாடவேளைகள் கையாளும் ஆசிரியர்களை, கீழ்நிலை வகுப்புகளாக கருதப்படும், ஒன்பது, பத்தாம் வகுப்பு பாடத்தை கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நடைமுறையை பின்பற்றி, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 28ம் தேதி, சென்னை, எழும்பூர் மாநில மாகாண மகளிர்மேல்நிலைப்பள்ளியில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.உறுதி செய்ய ஆய்வு கூட்டம்முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,'' கோவையில் அரசாணைப்படி, ஆசிரியர்களுக்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இதை உறுதி செய்ய, வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இயக்குனரகத்துக்கு உரிய கால அவகாசத்துக்குள், இதுசார்ந்த விபரங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி