32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2019

32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழலையர் வகுப்புகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில், "ப்ரீ.கே.ஜி. - எல்.கே.ஜி.- யு.கே.ஜி' எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.ஆனால், அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக்பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலும், கே.ஜிவகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 2018 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.இதற்காக 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 2018-ஆம் ஆண்டு புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை.இதையடுத்து 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்த்து மழலையர் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.அதேபோன்று மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ள 32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி