ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வும் கடினம்: இரண்டு மாதத்தில் முடிவுகளை வெளியிட திட்டம் - kalviseithi

Jun 10, 2019

ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வும் கடினம்: இரண்டு மாதத்தில் முடிவுகளை வெளியிட திட்டம்


ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இரு மாதத்தில் முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.

முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்புவரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர்கள்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு டெட் தேர்வுக்கு 6.4 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இதையடுத்து டெட் முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,081 மையங்களில் டெட் 2-ம் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்வை 4.2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2-ம் தாள் தேர்வும் கடினமாக இருந்ததாகவும், கணிதம், உளவியல், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மறைமுக கேள்விகள் அதிகம் இடம்பெற்றதாகவும் தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தி 2 மாதங்களில் முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் கூறினர்.

10 comments:

  1. Itharku idaiyil pg trb call for aguma

    ReplyDelete
  2. PG TRB AND NET NTA NEW SYLABUS FUL NOTES AVAILABLE FOR ENGLISH CONTACT NO.8489243942.

    ReplyDelete
  3. Veetuku oruvaruku gvt vela, or first talaimurai patathari kaluku velai 2013,2017 tet pass pannuna vangala indha madhiri select pannunga please, intha tet la pass pannama vitamna nanga eligible illatha teacher aa.2017 LA eligible iruntha teacher ku 2019 LA eligible illa thavangala....

    ReplyDelete
  4. Question eaduthavarea neer engayea poitteer aiyah 2013 and 2017 paper 1&2 la pass aana nan ithula fail umakku oru statue vaikanum , apram n aiyah waste a oru syllabus trb la vittinga athula 6-8 th old syllabus tamil but neer question eaduthathu 11 th new book ungala polaava (trb) irukkum varai engala polaava(Tet candidate) ku posting kidaika no chance , trb venum na onnu seiyalam pass pannava eallarukum vara group 4 la job vangi kudunga ippudi sencha mattumea engaloda kanavu plus hard work sarthiyamagum... 82000 perayum eni Varum ealla Govt jobs layum exam vaikama podunga oru 4 years ku ...nanga eallarum Teachers engalidam eantha department layum sathikum ability irukku venum na training kuda kudunga ippudi 6 years a pottu kastapaduthathinga pls do needful step pls

    ReplyDelete
  5. TET 2012,2013,2014,2017ல் தேர்ச்சி பெற்றவர்கள் TET 2019 தேர்வு கடினமகடினமாக இருந்தது என நினைத்து புலம்புவதை விடுத்து அடுத்து வரவிருக்கும் ஆசிரியர் பணி நியமன போட்டித் தேர்வுக்கு கவனம் செலுத்துவோம்.. syllabus எப்படியும் கடசியா தா குடுப்பாங்க.. அதுவரை இப்பொ tet ku படுச்சத மறந்துடாதீங்க இதயே இன்னும் திரும்ப திரும்ப படிங்க.. all the best..

    ReplyDelete
    Replies
    1. Thangam sr,,,p1,p2,potti thervu epudi irkum exam pls tell...

      Delete
  6. Intha mathri kastama questions edukka enkalukkum theriyum .naanka questions eduta unkalukkum 30 marks than kidaikum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி