பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று ( 26.07.2019 ) கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று ( 26.07.2019 ) கடைசி நாள்


அரசு தேர்வுத்துறை வெளியிட்ட உள்ள அறிவிப்பு:

 கடந்த ஜூன் மாதம் நடை பெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி அதன் நகல் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

இதை பூர்த்தி செய்து 2 நகல் கள் எடுத்து இன்று மாலை 5 மணிக்குள் (ஜூலை 26) சம் மந்தபட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரி யல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப் பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன் படுத்தியே பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி