10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2019

10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கல்வித்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டத்திலும் தேர்வுத் துறை யிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில் பத்தாம் வகுப்புக்கும் புதிய பாடத்திட்டம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.எனினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட தால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராவதில் குழப்பம் நீடித்தது.முதல் பருவத் தேர்வுகளும் தொடங்கி நடந்து வருகின் றன. இந்நிலையில் பொதுத்தேர்வுக் கான மாதிரி வினாத்தாள்களை கல்வித்துறை நேற்று தனது இணையதளத்தில் வெளியிட் டுள்ளது.அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவி யல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாநில கல்வி யில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப் பட்டுள்ளன.மேலும், அனைத்து பள்ளிகளுக் கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப் பட்டுள்ளன.

இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவ மைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி