பிளஸ் 2 தேர்வு பதிவுக்கு இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2020

பிளஸ் 2 தேர்வு பதிவுக்கு இன்று கடைசி நாள்


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள், 'தத்கல்' முறையில் பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி, சிலபாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், பழைய பாடத் திட்டத்திலேயே, வரும் மார்ச் மற்றும் ஜூனில் தேர்வுகளை எழுதலாம்.

நேரடி தனி தேர்வராக, பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி, அதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொது தேர்வையும், அதனுடன், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வையும் எழுதலாம். இதற்கு, ஏற்கனவே, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அப்போது விண்ணப்பிக்க தவறியவர்கள், தத்கல் சிறப்பு கட்டண முறையில், ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; இன்று கடைசி நாள்.அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி