குழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2020

குழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி!


குழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி

 18 வயது வரை பள்ளியில் கல்வி கற்பதை உறுதி செய்வோம் குழந்தைகளுக்கான வாழும் உரிமை , வளரும் உரிமை , பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்ப்பு உரிமை ஆகியவற்றை அனைத்து தளங்களிலும் உறுதி செய்வோம் . மேலும் , நமது  குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ , குழந்தை தொழிலாளராகவோ , குழந்தை திருமணமோ , பெண் சிசு மற்றும் கருக் கொலையோ , பாலின பாகுபாடோ , குழந்தை கடத்தலோ நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் , குழந்தைகளின் பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம் . மற்றும் அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிப்போம் கிராம மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , ஒருங்கினணந்த சேவை மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் அளிப்போம் திருவண்ணாமலை மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக மாற்ற மனமார உறுதி அளிக்கிறோம்.

" இணைந்து நாமும் செயல்படுவோம் . "

" குழந்தை உரிமை பாதுகாத்திடுவோம் ."

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி