இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.
கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.
இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.
இதுவும் போச்சா????
ReplyDeleteTRB-POLYTECHNIC and PG- TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
ReplyDelete(Material available)
Government should consider the efforts and hard work of the genuine candidates..... innocent students should not be punupuni by making them write again...it is not at all fair...tnpsc and trb both recruiting for govt jobs only in the same state....but different decision....
ReplyDeleteMoreover omr is safe in trb in tnpsc omr is tampered.
DeleteIn trb carbon copy of omr is given to the students but in tnpsc no omr carbon copy
Government should consider the efforts and hard work of the genuine candidates..... innocent students should not be punupuni by making them write again...it is not at all fair...tnpsc and trb both recruiting for govt jobs only in the same state....but different decision....
ReplyDeleteGovernment has to explain why polytechnic trb 2017 cancelled eventhough they have identified culprits who got the marks through a different way and government have perfect evidence for malpractice. But the government not cancelled tnpsc group 4 exam even they can't identify culprits in exact quantity. This means government can take any decision without logic.
ReplyDeleteநீதியை நிலை நிறுத்த தன் மகனை தேரில் இடறச் செய்த மனுநீதி சோழன், ஒற்றை சிலம்பிற்காக தனது அரியணையை துறந்த பாண்டியன் ஆண்ட நிலத்தில் வாழும் நாம் நமக்கான நீதியை தேடிக் கொண்டிருக்கிறோம் .
ReplyDeleteடிஎன்பிஎஸ்ஸி மற்றும் டிஆர்பி இரண்டுமே படித்த இளையோரின் வாழ்வை முன்னெடுப்பதற்கான ஆதாரங்கள். டிஆர்பி நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்ஸி நடத்திய குரூப்4 தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றது.
கூடுதல் தகவலாக இரண்டிலுமே இடைத்தரகர் தலைவன் ஜெயக்குமார் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
டிஎன்பிஎஸ்ஸி தேர்வு முறைகேட்டில் மறுதேர்வு அறிவிக்கப்படவில்லை(உண்மைத் தேர்வர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக), அனைத்து தேர்வுகளும் அலசப்படுகிறது, இடைத்தரகர்களிடமிருந்து பணமும் வாகனகங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
உச்சமாக, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால், டிஆர்பி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது(உண்மை தேர்வர்கள் நலன் புறந்தள்ளப்பட்டுள்ளது). மற்ற தேர்வுகள்(டெட், பிஜிடிஆர்பி) அலசப்படவில்லை, பணமும் வாகனகங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் கைதும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சமாக முறைகேடான தேர்வர்களின் தகவல் கூட வெளியிடப்படவில்லை.
ஒரே நிலத்தில், ஒரே மாதிரியான முறைகேட்டிற்கு இரண்டு விதமான தீர்ப்புகளா(மறுதேர்வு)? டிஎன்பிஎஸ்ஸி குரூப்4 தேர்வில் முறைகேடான தேர்வர்கள் நீக்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போன்று ஏன் டிஆர்பி பாலிடெக்னிக் தேர்வுக்கும் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது?பாலிடெக்னிக் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது ஏன் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை(தேர்வெழுத வாழ்நாள் தடை,முறைகேடில் ஈடுபட்ட தேர்வர்கள் விவரம்)?கொள்கை முடிவு என்பதே அனைத்துக்கும் பதிலானால் ஏழை, படித்த, நேர்மையான இளையோரின் நல்வாய்ப்புகள் பறிக்கப்படுவதும் முறைகேடுகளை ஊக்குவிப்பதுமே அரசின் கொள்கையென பொதுமக்கள் விளங்கிக் கொள்ள நேரிடும்.
சனநாயக நிலத்தில் நீதி வேண்டி தொடர்ந்து இறைஞ்சுகிறோம்.
Give job to innocent Genuine candidates... TRB POLYTECHNIC 2017
ReplyDeletePooga frds entha exam natakka vidathiga...
ReplyDeletePublish 197 candidates details....And punish them don't write exam..Otherwise they malpractice again... Why govt(TRB) save the 197 candidates?.. ethuku govt.m udanthaiya erukko... naama thaan purinchukama erukkoma?.. kadavulthaan kaapathanum...
ReplyDeletePlz add me to trb group link or trb mechanical group
ReplyDeleteMy no. 8248194288
Plz add me to trb whatsapp group or trb mechanical whatsapp group
ReplyDeleteMy no. 8248194288
Candidates who have applied already in 2017 exam may be exempted from payment of exam fee.as it is a reexam.
ReplyDelete