CPS நிதியை முதல்வர் பொது நிவாரணத்திற்கு பிடித்தம் செய்ய இயலாது.. CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2020

CPS நிதியை முதல்வர் பொது நிவாரணத்திற்கு பிடித்தம் செய்ய இயலாது.. CM CELL Reply!




திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் கல்வி மாவட்டம் , வேடசந்தூர் ஒன்றியம் , எரியோடு , சாய்ராம் நகர் திரு.பி.பிரடெரிக் ஏஞ்சல்ஸ் என்பாரிடமிருந்து மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு எண் :

1079718/2020 நாள் 30.03.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண நிதிக்காக தன்னுடைய ஒரு நாள் ஊதியம் வழங்கியுள்ளதாகவும் , தன்னுடைய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி இருப்பில் உள்ள தொகையில் ரூ .10000 / - ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) எடுத்துக் கொள்வதோடு , தனது CPS NO : 705294 / PUPS EDN இல் , 2020 ஏப்ரல் , மே , ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்குரிய தன்னுடைய பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்புத் தொகையில் சுமார் ரூ.36,000 / ( ரூபாய் முப்பத்தாறாயிரம் மட்டும் ) கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

இப்புகார் மனு தொடர்பாக மனுவை ஆய்வு செய்ததில் , அரசாணையின்படி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் மட்டுமே மேற்படி நிவாரண நிதி பிடித்தம் செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளதால் , மனுதாரரின் கோரிக்கை சார்ந்து பரிசீலிக்க இயலவில்லை என்ற விவரம் மனுதாரருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. போராளி பிர‌டெரிக் அண்ண‌னுக்கு வாழ்த்துக‌ள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி