அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 மருத்துவ, சீட் ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 மருத்துவ, சீட் ஒதுக்கீடு


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், 278 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 23 அரசு கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,250 இடங்கள் உள்ளன.மேலும், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., பெருந்துறை, ஐ.ஆர்.டி., மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரிகளில், 350 இடங்கள் உள்ளன. இதன்படி, அரசிடம் மொத்தம், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும், ஓரிரு மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை இருந்தது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர் களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிக்கும் வகையில், இடஒதுக்கீடு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, தமிழக அமைச்சரவை, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு, நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 270 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.மேலும், சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவ படிப்பில், எட்டு இடங்கள், அரசு பள்ளி மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

இந்த எண்ணிக்கை, அடுத்தாண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த கல்வியாண்டில், 11 மருத்துவ கல்லுாரிகள், புதிதாக துவக்கப்பட உள்ளன.இந்த மருத்துவ கல்லுாரிகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 124 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு, அரசு கல்லுாரிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது தனியார் மருத்துவ கல்லுாரிக்கும் பொருந்துமா என்பது, அரசிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

5 comments:

  1. 25% ஒதுக்கீடு இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்..

    ReplyDelete
  2. மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இந்த இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி