9, பிளஸ் 1 பள்ளி திறப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2021

9, பிளஸ் 1 பள்ளி திறப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு.

 

ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கிஉள்ளன. 


மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்., 1 அல்லது 2ல், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 comments:

  1. 9 மற்றும் 11 வகுப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டாதா? பொது தேர்வு என்பதால் 10 மற்றும் 12 வகுப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். இன்னும் கல்லூரி இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திறக்கவில்லை. இந்த நிலையில் ஏன் பள்ளி மாணவர்களுக்கு அவசரமாக திறக்க வேண்டும்?

    ReplyDelete
  2. Engaluku corona vandhal mr.sengottaiyan avargal 1000000 kodupar endru arivipu varatum palliku varugirom

    ReplyDelete
    Replies
    1. setthutta unga velai innoru alukku kidaikkum, kaasu kooda kuduppaanga

      Delete
  3. School thurundlum nanga varamatom

    ReplyDelete
  4. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி