பாகம் எண் மாறி உள்ளதால் தபால் வாக்குகள் செல்லாமல் போய் விடும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் புகார் - kalviseithi

Mar 19, 2021

பாகம் எண் மாறி உள்ளதால் தபால் வாக்குகள் செல்லாமல் போய் விடும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் புகார்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணையில் பாகம் எண் மாறி வருவதால் தபால் வாக்குகள் செல்லாமல் போய் விடும் என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளியில் நேற்று முதல் துவங்கியது. இதில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயருக்கான பாக எண்,


தேர்தல் பணிக்காக வழங்கப்படும் அரசு ஆணையில் வரக்கூடிய வாக்காளர் பட்டியலுக்கான பாகம் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் தேர்தல் பணிக்காக வழங்கப்படும் ஆணையில் பாகம் எண் மாறி வருவதால் இவர்கள் அளிக்கக்கூடிய தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது. பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள 2,000 பேரில் 1,700க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்கான ஆணையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கேட்டதற்கு, உரிய நடவடிக்கை எடுத்து குறைகள் களையப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி