தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இனி இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது : முதல்வர் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2021

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இனி இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது : முதல்வர் அதிரடி

 

கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் கிருமி 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கிருமியை கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ள நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து கொரோனா அதிகளவில் பரவி வரும் கேரளாவில் தடுப்பூசி வழங்கும் பணிகளை பினராயி விஜயன் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் பணியில் இருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களை இனி இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது என்று முதல்வர் பினராய் விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாரம் ஒரு முறை தங்களது சொந்த செலவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதற்கான முடிவுகளை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத பணியாளர்கள் அதற்குரிய சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் 5000 ஆசிரியர்கள் மத நம்பிக்கையை  காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வரும் நிலையில், கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

2 comments:

  1. முட்டாள் முதல்வர்.. அடிப்படை சட்டம் தெரியாத தற்குறி

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் இதேபோல் கூறினால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி