'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் - 2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் பாடதிட்டம் புதிய பாடநூல்களை அடிப்படையாக கொண்டதா அல்லது பழைய பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டது?? நண்பர்கள் தெளிவாக தெரிந்தால் பதிவிடவும்..நன்றி
ReplyDeleteTet passed 2013 posting poodunga cm sir
ReplyDeleteTET ku posting podathatharku main kaaraname intha 2013 candidates thaan....
Delete