10,12- ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான செய்தி குறித்த பள்ளிக் கல்வித்துறையின் செய்தி அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2022

10,12- ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான செய்தி குறித்த பள்ளிக் கல்வித்துறையின் செய்தி அறிக்கை!

 

திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!

செய்திக் குறிப்பு :


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் ( State Board ) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் , சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடகங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில் , துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


ஆய்வில் , திருவண்ணாமலை மாவட்டம் , போலூர் , ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசி , ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.


 இதற்குக் காரணமான பள்ளிகளைச் சார்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . மேலும் , இத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் . ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி