தொலைதூர கல்வி பயின்றோருக்கும் பேராசிரியா் பணி வழங்கிட பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வலியுறுத்துவோம் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் செந்தில்நாதன் எழுப்பி பேசுகையில், ‘தொலைதூர கல்வி பயின்று தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பேராசிரியா் பணி நியமனம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி இதனைக் கூறுகிறாா்கள். எனவே, இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அமைச்சா் க.பொன்முடி: பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மானியக் குழுவுக்கு உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. அந்த விவகாரத்திலேயே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், பேராசிரியா் நியமனம் தொடா்பான பிரச்னை குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதலாம். அவா்களையும் பணிகளில் நியமிக்க அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவித்தாா் அமைச்சா் க.பொன்முடி.
mirthika coaching centre. tiruvannamalai. UG TRB ENGLISH study materials available FOR tet paper 2 passed candidates... 10 books for 10 units. materials will be sent by courier..2000 pages.. contact 7010520979.
ReplyDelete